சனி, 25 நவம்பர், 2017

அஞ்சலக கணக்கு; ஆதார் கட்டாயம்.

அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்த அஞ்சல்துறை அறிவிப்பு: மத்திய அரசு உத்தரவுப்படி, டிச., 31க்குள், அஞ்சலக கணக்குகளுடன் ஆதார், மொபைல் எண்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்திய அஞ்சல்துறை, இதற்கான பணியை 
தீவிரப்படுத்தி உள்ளது. 

எனவே, இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டை நகலுடன், மொபைல் போன் எண், அஞ்சல கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அஞ்சலகத்திலோ, தபால்காரர்களிடமோ சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக