திங்கள், 20 நவம்பர், 2017

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பணி மூப்பு, அனுபவம், கல்வித்தகுதி 

அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படும். அனுபவம் பெற்ற, தகுதியான தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக