வியாழன், 23 நவம்பர், 2017

பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களை அடுத்து மோடி அரசு இதையும் தடை செய்யப் போகிறதாம்..!

ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்து ஒரே இரவில் மக்கள் விழிபிதுங்கினர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கியினை அடுத்து நரேந்திர மோடி தலைமையிலான மோடி அரசு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையினைப் பிரபலப்படுத்தி வந்தது. தற்போது ஓர் அளவிற்கு இணையதள, டிஜிட்டல் மற்றும் வாலெட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையி அடுத்தத் தற்போது செக் புக்குகளைத் தடை செய்யும் எண்ணத்தில் உள்ளதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. 


2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மோடி அரசு தடை செய்த உடன் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகளும் வெற்றுக் காகிதம் ஆகிப்போயின. தற்போது பணமில்லா டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியாவின் அடுத்தக் கட்டமாக மத்திய அரசு செக் புக்குகளைத் தடை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் மூத்த தலைவர் பிரவின் கந்தவேல் அன்மையில் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான ஏடிஎம்- டெபிட் கார்டுகளில் 95 சதவீதம் ரொக்க பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்துவதாகவும், 5 சதவீதம் மட்டுமே மின்னணு பரிவர்த்தனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மத்திய அரசு கொண்டு வர இருக்கும் இந்தச் செக்குகளைத் தடை செய்யும் முடிவால் 95 சதவீதம் வரை செக் பரிவர்த்தனைகளை நம்பி உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே ரொக்க பண மதிப்பை நீக்கியதில் பெரிதும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

அப்போதும் இவர்களுக்குச் செக் புக் பரிவர்த்தனை முறை பெரிதும் உதவியது. இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் 17.9 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளை அடுத்து 16.3 லட்சமாக உள்ளது என்றும் 31 சதவீதம் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு 25,000 கோடி ரூபாயும், பாதுகாப்பு அம்சங்களுக்காக 6,000 கோடி வரையிலும் மத்திய அரசுக்குச் செலவாகிறது. இதனைக் குறைத்து வங்கிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குப் பெறும் கட்டணத்திற்கு மானியமாக வழங்க மத்திய அரசு அளிக்க முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக