வியாழன், 23 நவம்பர், 2017

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

🍎அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

🌻பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.
🌻ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:

1) பயனாளி திட்டத்தை முழுமையாகப்
புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது

. 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.


🍊 வட்டி வீதம்:

🌻கடன் தொகையில்

முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %

50,001 முதல் 1,50,000 வரை : 7%

1,50,001 முதல் 5,00,000 வரை: 9%

5,00,000க்கு மேல் : 10%


🌻இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.

🍊கடன் வரம்பு:

🌻அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000.

🌻கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம்.

🌻 அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.

🍊யாரெல்லாம் கடன் பெறலாம்?:

🌻சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

🍊கடனின் பல்வேறு பிரிவுகள்:

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.

2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.

3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.

4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.

5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.

6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.

7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.

8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.

9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.

10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.

🍊விண்ணப்பம்:

🌻வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.

* மனை வரைபடம்

* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )

* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு

* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று

* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )

* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று

* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்

🍊கடன் ஏற்பளிப்பு:

🌻மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.

🌻முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.

🌻இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.

🌻ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.

🍊கடன் பிடித்தம்:

🌻ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும்.

🌻 இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.

🌻இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.

🍊காப்பீடு:

🌻வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

🍎சிறப்பு குடும்ப நலத்திட்டம்:

🌻வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும்.

🌻 கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக