புதன், 22 நவம்பர், 2017

நோயாளிகள் இனி வரிசையில் நிற்க வேண்டாம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நிம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் 
வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் நிம்ஸ் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்குத் தினமும் ஏராளமானோர் உள் மற்றும் புற நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைக்கான அனுமதிச் சீட்டு, மருத்துவப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பெறுவதில் நோயாளிகள் கடுமையாக சிரமப்பட்டு வருவதாகப் பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, நிர்வாகம் சார்பில் மருத்துவமனையைக் கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நிம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என நிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மனோகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த ஏப்ரல் மாதம் முதல்கட்டமாக வெளிநோயாளிகள் பிரிவில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகள் இனி வரிசையில் நிற்க வேண்டாம். அவர்கள் இந்த ஆப் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செயலியைத் தரவிறக்கம் செய்ய: NIMS HMIS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக