வியாழன், 30 நவம்பர், 2017

'ஸ்டாம்ப்' சேகரித்தால், 'ஸ்காலர்ஷிப்

'ஸ்டாம்ப்' சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசின், 'தீன்தயாள் ஸ்பேர்ஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், அஞ்சல் துறை சார்பில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. இதன்படி, இந்தியா முழுவதும், அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள, ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 920 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், ஆண்டிற்கு, 6,000 ரூபாய், உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில், தமிழக மாணவர்கள், 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துமாணவர்கள், டிச., 12க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதையடுத்து, எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மற்றொரு, செயல் திட்டம் தரப்படும். 


அதை சிறப்பாக செயல்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களை, tamilnadupost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, தமிழக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக