செவ்வாய், 21 நவம்பர், 2017

10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.

தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கு, அக்டோபரில் நடந்த துணை தேர்வில், 22 ஆயிரத்து, 665 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்களில், 184 பேருக்கு, பல்வேறு பாடங்களில், 

383 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில், 17 பேருக்கு மதிப்பெண் மாறிஉள்ளது. அவர்கள், தற்காலிக சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று காலை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மாறியவர்கள் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக