"என்னை யாராலும் ஏமாற்ற முடியாது!' என்று பெருமை அடித்துக் கொண்டான் அப்துல்.
அதைக் கேட்ட முல்லா நஸ்ருதீன், "உன்னால் இங்கே ஐந்து நிமிடம் காத்திருக்க முடிந்தால், அதற்குள் உன்னை ஏமாற்றும் வழியைக் கண்டுபிடித்து வருவேன்!' என்றார்.
"ஓ... தாராளமாக!' என்று இறுமாப்புடன் பதில் சொன்னான் அப்துல்.
அவசரமாக எங்கோ சென்றார் முல்லா.
நேரம் சென்றது, ஐந்து நிமிடம் அரைமணியாகியது; ஒரு மணி நேரம்; இரண்டு மணி நேரம் ஓடி விட்டது.
முல்லா திரும்பியபாடில்லை; அப்துலுக்கோ ஒரே கோபம்!
நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த அருகிலிருந்த கடைக்காரன், "என்ன அப்துல்! வெகு நேரமாய் நிற்கிறாய்?' என்று கேட்டான்.
"என்னை ஏமாற்றும் வழியைக் கண்டுபிடித்து வர முல்லா போயிருக்கிறார்;அவருக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்...' என்றான்.
"முட்டாளே! அவர் போனதே உன்னை ஏமாற்றிவிட்டுத்தானே! 😜😝
இப்படியே வீணாக அவரை எதிர்பார்த்து நீ நிற்கப் போகிறாய்!' என்று சொல்லி சிரித்தான் கடைக்காரன்.
— சமீபத்தில் படித்த முல்லா கதை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக