சனி, 16 செப்டம்பர், 2017

பொண்டாட்டியும்_பிரியாணியும்...

கணவனுக்கும் மனைவிக்கும் கடும் சண்டை.

இவர் வாயில் வந்த வார்த்தைகளால் மனைவியை திட்ட, பொறுக்க மாட்டாத  மனைவி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டாள்.

பின்னாலேயே கணவனும்  போனான். பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி, இனிப்பு, காரம், டீ கொடுத்து அனுப்பினர்.

வீட்டிற்கு வந்த கணவன் இரண்டுநாட்கள் கழித்து மறுபடியும் அதிகமாக சண்டை போட ஆரம்பித்தான்.


மனைவி வெளியே செல்ல கதவைத் திறந்தாள்.

அப்போது கணவன் சொன்னான்

"இப்ப இதே தெருவுல இருக்கற 18 ம் நெம்பர் வீட்டுக்கு போ...அவங்க வீட்லதான் இன்னைக்கு நல்ல குட்டி ஆடா பார்த்து வெட்டி பிரியாணி சமைக்கிறாங்க" 😜

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக