தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.விஜயன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2018-ம் ஆண்டுக்கான பி.எட். (பொது), பி.எட். (சிறப்பு கல்வி) படிப்புகளுக்கான விளக்க கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
பி.எட். (பொது)படிப்பில் சேர ஆசிரியர் பட்டயப் படிப்புடன்(இடைநிலை ஆசிரியர் பயிற்சி) இளங்கலை பட்டம்பெற்று தற்போது ஆசிரியர் பணியில் இருக்க வேண்டும். பி.எட். (சிறப்பு கல்வி) படிப்புக்கு இந்திய மறுவாழ்வு கவுன்சில் நிர்ணயித்துள்ள தகுதிகளை பெற்றிருக்க வேண்டியது அவசியம். விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேட்டை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய 044-24306600, 24306617 ஆகிய தொலைபேசிஎண்களில் தொடர்புகொள்ள லாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக