சனி, 16 செப்டம்பர், 2017

நமது பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் (zero hour) பேசினார்... ஸீரோ ஹவரில் பேசுங்கள்... என்றெல்லாம் கூறுகிறார்களே... "பூஜ்ய நேரம்' என்றால் என்ன?

பாராளுமன்றத்தில் பொதுவாக காலை பதினோரு மணியளவில், உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளின் பிரச்னைகளைப் பற்றி கேள்விகள் கேட்க அனுமதிப்பார்கள். இந்தச் சமயத்தில்கேள்விகள் கேட்பதற்கு அவைத்தலைவரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்
.
இதன் பிறகு 12 மணியிலிருந்து 1 மணி வரை உள்ள நேரம் "பூஜ்ய நேரம்' என்று கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் முன் அனுமதி பெற முடியாத நிலையில் உள்ளவர்களும் எந்தவொரு பிரச்னை குறித்தும் கேள்வி எழுப்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக