அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அதில் 2538 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி சான்று சரிபார்ப்பு நடந்தது. தற்போது பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான கவுன்சலிங் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது.
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அசல் கல்விச் சான்றுகளுடன் செல்ல வேண்டும். முதுநிலை ஆசிரியர்களை பொறுத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கவுன்சலிங்கும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களுக்கான கவுன்சலிங்கும் நடத்தப்படும். பணி நியமன உத்தரவுகள், சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் 21ம் தேதி நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்லும் நண்பர்களே...
கீழ்க்காணும் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்:-
1. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
2. அனைத்து அசல் சான்றிதழ்கள்.
3. அனைத்து அசல் சான்றிதழ்களின் இரு நகல்கள்.
4. உங்களின் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்.
5. சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ள நீங்கள் ஏற்கனவே கொண்டு சென்ற ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த கடிதம்.
இவை அனைத்தையும் எடுத்து கொண்டு 19 ஆம் தேதி கலந்தாய்வு மையத்திற்கு காலை எட்டு அல்லது எட்டரை மணிக்கு சென்று விடுங்கள்.
கலந்தாய்வு மையத்தில் பாடவாரியாக கலந்தாய்வு நடைபெறும் அறைகள் பற்றிய பட்டியல் ஒட்டப்பட்டு இருக்கும். அதனை பார்த்து உங்கள் பாடத்துக்கு உரிய அறைக்கு சென்று உட்கார்ந்து விடுங்கள்.
கலந்தாய்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன் காலி பணியிடங்கள் பற்றிய பட்டியல் ஒட்டப்படும். அதனை பார்த்து உங்களுக்கு பிடித்த இடங்கள் ஏதேனும் சிலவற்றை குறித்து வைத்துக் கொள்ளவும். இது கடைசி நேர பதட்டத்தை குறைக்க உதவுவதுடன் நல்ல இடத்தை தேர்வு செய்யவும் உதவும்.
இந்த மாதம் 21ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உங்கள் அனைவருக்கும் பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
பணி நியமன ஆணை பெற்ற பின்னர் உரிய மருத்துவரிடம் மருத்துவ சான்று பெற்றுக் கொண்டு நீங்கள் ஏற்கனவே கலந்தாய்வில் தேர்வு செய்த பள்ளிக்கு சென்று பணியில் இணையலாம். பணியில் சேர வேண்டிய நாள் உங்கள் பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். (அக்டோ ஜப்பர் மூன்றாம் தேதி பணியில் சேரும் நாள் ஆக இருக்கும்)
என்றும் அன்புடன்
சு.ஜாக்சன்
தருமபுரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக