புதன், 20 செப்டம்பர், 2017

1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்.

தமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. 2011 முதல் இதுவரை, 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கொள்முதல் சிக்கல் காரணமாக, 2016 - 17ல், வழங்கப்படாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, 'டெண்டர்' தொடர்பான சிக்கல்கள் தீர்ந்ததால், 'லேப் - டாப்' கொள்முதல் துவங்கி உள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2016 - 17ம் கல்வியாண்டில் தர வேண்டிய மாணவர்களுக்காக, ஐந்து லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்ய, டெண்டர் இறுதியானது. அதில், 'லெனோவா, டெல்' ஆகிய நிறுவனங்களிடம் இருந்து, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவை, விரைவில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, வினியோகம் துவங்கும். மீதமுள்ள, 3.5 லட்சம், 'லேப் - டாப்'கள் சில மாதங்களில் கிடைத்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக