வியாழன், 5 அக்டோபர், 2017

சிறை துறை பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.

சிறை துறை அலுவலர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சிறை துறையில், சிறை உதவி அலுவலர் பணியில், ௧௦௪ காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, 2016 ஜூலையில் நடந்த எழுத்துத் தேர்வில், 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 


சிறை துறை சமூக ஆய்வு நிபுணர் பதவியில், மூன்று காலி இடங்களுக்கு, ௨௦௧௭ மே மாதம் நடந்தது; இதில், 272 பேர் பங்கேற்றனர். இந்த இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றோர், முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, அக்., 10, 11ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக