திங்கள், 30 அக்டோபர், 2017

பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கியது போல், பொதுத் துறை ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு  உத்தரவிட்டு உள்ளது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, தமிழகத்தில் அமல்படுத்த, தகுந்த பரிந்துரைகள் வழங்க,  அலுவலர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. 

அக்குழு, செப்., 27ல், அறிக்கை சமர்ப்பித்தது. அதை ஏற்று, அக்., 11ல், புதிய ஊதிய உயர்வை, தமிழக அரசு அறிவித்தது.

அதே போல், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், சம்பள உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை, வெளியிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக