வியாழன், 26 அக்டோபர், 2017

மனை வரன்முறை விதிமுறைகள் வெளியீடு.

தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனை வரன்முறை திட்டத்திற்கான, ஒருங்கிணைந்த விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், 2016 அக்., 20 முன் உருவான அங்கீகாரமில்லா மனைகள், மனைப்பிரிவுகளை, வரன்முறை செய்வதற்கான அரசாணை, மே, 4ல் பிறப்பிக்கப்பட்டது.
இதை அமல்படுத்துவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. வரன்முறை திட்டத்தை முறையாக செயல்படுத்த, சில விதிமுறைகளை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, விதிமுறைகளை தளர்த்தவும், கட்டணங்களை குறைக்கவும், அக்., 12ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, அக்., 13ல் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், மே, 4 மற்றும் அக்., 13 அரசாணைகளை ஒருங்கிணைத்து, வரன்முறை அதிகாரிகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. 

அவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இதற்கிடையில், அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறை திட்டம், 2018 மே, 3 வரை நீட்டிக்கப்பட்டுளளது. இதற்கான அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஆனால், வரன்முறை திட்டத்துக்காக துவங்கப்பட்ட, tnlayoutreg.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் இல்லை. நவ., 3 கடைசி நாள் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ளது. அக்., 13ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக