செவ்வாய், 24 அக்டோபர், 2017

சித்தா மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்.

சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.        தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, அரசு மற்றும் தனியார் கல்லுாரி களில், 1,216 இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. 

இந்த படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், அக்., 11 முதல், 14 வரை நடந்தது. கவுன்சிலிங் முடிவில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 390 இடங்களும், தனியார் கல்லுாரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கு, 295 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவ கல்லுாரியில், நாளை துவங்கி, அக்., 27 வரை நடைபெற உள்ளது. இதில், தர வரிசை பட்டியலில், 3,526 முதல், 5,633 இடங்கள் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக