புதன், 25 அக்டோபர், 2017

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வாங்கியான ரிசர்வ் வங்கியின் பல மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் காலியாக உள்ள 623 "அசிஸ்டன்ட்" பணியிடங்களுக்கு விண்ணப்பிதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு தேசிய அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இந்த எழுத்துத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அதனைத் தொடர்ந்து மொழிப்பாட அறிவுத் தேர்வு (Language Proficiency test) ஆகிய தேர்வுகள் இதில் அடங்கும். இதில் அனைத்து தேர்விலும் வெற்றி பெறும் தகுதியான நபர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வில் ஆங்கில மொழிப்பாடத்தில் இருந்து 30 கேள்விகளும், எண் கணிதத் திறன் (Numerical ability) பகுதியில் இருந்து 35 கேள்விகள், காரணம் அறியும் திறன்(Reasoning ability) பகுதியில் இருந்து 35 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு பதிலளிக்க ஒரு மணி நேரம் மட்டுமே கால அவகாசம் ஆகும். இதில் எடுக்கும் மதிப்பெண்களை பெறுத்தே முதன்மை தேர்வை எழுத முடியும். முதன்மைத் தேர்வில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பகுதிகளுடன் சேர்த்து பொதுஅறிவு மற்றும் கணினி அறிவு ஆகியவை இடம்பெறும். ஒவ்வொரு பகுதியிலும் 40 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் இடம்பெறும்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கம்பியூட்டரில் வேர்ட்-ஐ(Word) இயக்க தெரிந்திருப்பது அவசியம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்வராக இருக்க வேண்டும். அதவது 02/10/1989 தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் மற்றும் 01/10/1997 தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த பணிக்கான சம்பளம் தோரயமாக 34990 ரூபாய் ஆகும். இந்த பணிக்கு ஆன்லைனில் www.rbi.org.in. என்கிற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த 10.11.2017 கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் ஓபிசி மற்றும் பொது பிரிவினருக்கு 450 ரூபாய், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 50 ரூபாய் ஆகும்.நவம்பர் 27&28-ம் தேதிகளில் முதல்நிலைத் தேர்வும், டிசம்பர் 20-ம் தேதி முதன்மைத் தேர்வும் நடைபெறும்.

இதில் ஓபிசி/எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான முன்பயிற்சி (Pre-Examination Training) அருகில் உள்ள ரிசர்வ் வங்கியின் மாநில அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு தனியே விண்ணப்பித்தல் அவசியம். இதற்கான விண்ணப்பமும் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிக்க மற்றும் மேலும் தகவல்களுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளமான www.rbi.org.in. என்ற முகவரியை சொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக