செப்டம்பர், அக்டோபர்–2017 எஸ்.எஸ்.எல்.சி. துணை பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உள்பட) தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும், துணை தேர்வுக்கான மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு 31.10.2017 மற்றும் 1.11.2017 ஆகிய 2 நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக