வெள்ளி, 20 அக்டோபர், 2017

பொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டு தேர்வு.

தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 

இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு முன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக