ஞாயிறு, 15 அக்டோபர், 2017

அன்பு.....

||| ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.

+ பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,

_ இந்த பழம் மிகவும் புளிப்பாக  உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

+ உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு,
_ இல்லையேப்பா,

                    நல்லா தானே இருக்கு" என்பார், 
உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

_ இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,

 ^^"ஏங்க..
         பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு
சொல்லி >>டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார்.

+ உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்,
அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார்,

_ ஆனாலும், தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார்.
நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம்
அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுகிறார் என்றார்.

+ தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு,

_ அந்த பாட்டியிடம், 
            அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான், இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை
அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.

+ உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு,
அவன் என்னை தினமும் ஒரு பழத்தை
சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி,
கொடுத்து சாப்பிட வைக்கிறான்.

_ இது எனக்கு தெரியாது என்று
நினைக்கிறான்,
_ நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை,
_ மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது என்றார் அன்போடு....,

+++ இப்படிப்பட்ட  சின்ன சின்ன அன்பில் தானேங்க
ஜீவன் இன்னும் இருக்கு.....
+++ அன்பை விதையுங்கள்,
அதையே அறுவடை செய்வீர்கள்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக