இவன் சி. கண்ணதாசன்
நவராத்திரி மற்றும் பூஜை நாட்களில், சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுப்பது என்பது இந்துக்களின் பண்பாடு.
விழாவானாலும், விருந்தானாலும், விருந்தோம்பலில் வெற்றிலை பாக்கிற்கு முக்கிய அங்கம் உண்டு. அது இல்லையென்றால் விருந்தோம்பல் முழுமையடையாது.
கல்யாண வீட்டிற்குச் சென்றாலும், தாம்பூலப்பை வாங்கிக்கிட்டுப் போங்க என்று கூறுகிறார்கள். எல்லாவற்றையும் விட வெற்றிலை, பாக்கிற்கு எதனால் அவ்வளவு ஒரு மகத்துவம்?
முன்னோர்கள், வெற்றிலைக் கொடியை வீட்டிலேயே வளர்த்து வந்தார்கள். ஏனென்றால் அதன் மகத்துவத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள். இன்றைய நாட்களிலும் சொந்தமாக தனி வீடு வைத்திருப்பவர்கள் சிலர், வெற்றிலைக் கொடியை வளர்த்து வருகிறார்கள். பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்துவிடுகிறது.
வெற்றிலைஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை. இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது. இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படையச் செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து நேரிடையாகவே கிடைத்து விடுகிறது.
வெற்றிலைக்கு பல்வேறு மருத்துவ பலன்கள் உள்ளன. அவற்றுள் சில :
சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும். குழந்தை பிறந்தபின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயில் போட்டுமென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே தான்இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம். நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது. சைனஸ் பிரச்னைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும். வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.
வெற்றிலையுடன் புகையிலை சேர்ந்தால்தான் பிரச்னை உண்டாகிறது. ஆதலால், ஆனந்தமாக வெற்றிலையைச் சுவையுங்கள். அமோகமான வாழ்க்கை வாழுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக