வெள்ளி, 3 நவம்பர், 2017

'108' ஆம்புலன்சை தொடர்பு கொள்ள, 'மொபைல் ஆப்'.

தமிழகத்தில், '108' அவசர கால மைய கட்டுப்பாட்டு அறைக்கு, விபத்து குறித்து தகவல் தெரிவிக்க, புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ள, 'மொபைல் ஆப்'செயலியை, முதல்வர் பழனிசாமி, துவக்கி வைத்தார்.

மேலும், 75 லட்சம் ரூபாய் செலவில், '108' அவசர கால ஊர்தி டிரைவர்களுக்கு, 'ஆண்ட்ராய்டு மொபைல் போன்' வழங்கும் திட்டத்தையும், அவர் துவக்கினார்.


சாலை பலியை குறைக்க, '108' ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்துதல், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல் உட்பட, பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, '108' அவசரகால மைய கட்டுப்பாட்டு அறையை, பொது மக்கள் தொடர்புகொண்டு, விபத்துகுறித்து தகவல் தெரிவிக்க, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மொபைல் ஆப் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


இந்த மொபைல் ஆப் வழியே, அழைப்பவரின் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டு, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு, உடனடியாக ஆம்புலன்சை அனுப்ப முடியும்.பொது மக்கள், இந்த மொபைல் ஆப் வசதியை, 'கூகுள் ப்ளே ஸ்டோர்' பகுதிக்கு சென்று, 'அவசரம் 108' என, 'டைப்' செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய மொபைல் ஆப் மூலமாக, '108' மைய கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் தகவல், சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள ஊர்திக்கு தரப்பட்டு, உடனடியாக உதவ முடியும்.இரவு நேரங்களில், வழி கூற யாரும் இல்லாத காலங்களில், மொபைல் ஆப்  அதேபோல், 3.30 கோடி ரூபாய் செலவில், 22 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன.அவற்றை, முதல்வர் பழனிசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக