ஞாயிறு, 15 அக்டோபர், 2017

இந்த பூமியில் “ பூனை ” தான் அதிக மாயாஜால சக்திகள் கொண்ட விலங்கு என்று சொன்னால் நம்புவீர்களா, உண்மை தான்.

வளர்ப்பு பிராணிகளில் பூனைக்கு தான் இயற்கையாகவே மாயாஜால சக்திகள் அதிகம் இருக்கிறது.
.
நேர்மறையான ஆற்றல் தான் மாயாஜால சக்திகள்
.
ஆனால் பூனை முகத்தில் முழித்தால் அவ்வளவு தான் , பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை என்ற மூட நம்பிக்கைகள் காரணமாக பெரும்பாலும் யாரும் வீட்டில் வளர்க்க மாட்டார்கள். ஆனால் அது தவறான கருத்துக்கள்..

.
வளர்ப்பு பிராணிகளில் நாய் திருடர்களிடமிருந்து வீட்டை காப்பது போல பூனையும் எதிர்மறை சக்திகளில் இருந்து வீட்டை காக்கிறது.
.
ரஷ்யர்கள் மற்றும் அமெரிக்கர்கள் பூனையின் நேர்மறையான ஆற்றலை நன்கு புரிந்து வைத்து இருக்கிறார்கள்.
.
அவர்கள் ஒரு வீட்டிற்கு செல்லும்போது அல்லது புது வீட்டிற்கு செல்லும்போது பூனையை முதலில் அனுப்பி எதிர்மறையான ஆற்றலை விரட்டுவார்கள்.
.
ஒருவர் எதிரே எதிர்மறை எண்ணத்துடன் உங்களை மனதளவில் தாக்கி கொண்டிருந்தால் நீங்கள் வெறும் பூனையை மடியில் வைத்து வருடி கொண்டிருந்தால் போதும், உங்களை அந்த எதிர்மறை ஆற்றல்கள் பாதிக்காது.
.
பூனைக்கு இயற்கையாகவே உடலில் ஹீலிங் செய்யும் ஆற்றல் இருக்கிறது. பூனையை லேசாக வருடி கொடுக்கும்போது மனஅழுத்தத்தில் மற்றும் கோபத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது. நம் கண்களை தெளிவடையும் செய்யும் ஆற்றல் கூட பூனைக்கு உண்டு.
.
ரோண்டா பைரன் எடுத்த ரகசியம் திரைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு ஒரு உண்மை புலப்படும், அதில் பலர் தங்களுடைய வளர்ப்பு பிராணிகளாக பூனைகளை தான் வீட்டில் வளர்ப்பார்கள்.
.
பூனைக்கு இயற்கையாகவே உங்கள் சந்தோசத்தை அதிகபடுத்தும் ஆற்றல் இருக்கிறது. வளர்ப்பு பிராணிகளாக பூனைகள் உள்ள வீட்டில் மகிழ்ச்சி, சந்தோசம் நிறைந்து காணபடுகிறது.
.
ஒவ்வொரு வகையான பூனைக்கும் ஒவ்வொரு விதமான நேர்மறையான ஆற்றல் உண்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக