சனி, 28 அக்டோபர், 2017

எம்.பில்., - பிஎச்.டி., 'அட்மிஷன்' துவக்கம்.

சென்னை: எம்.பில்., மற்றும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை அறிவித்துள்ளது.

பல்கலை அறிவிப்பு: மத்திய அரசின், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியின்படி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புக்கு, நேரடியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்கான, இளநிலை ஆராய்ச்சி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் சேரலாம்.

தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, பொருளாதாரம், திரைப்படம் மற்றும் நாடகம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், சமூக அறிவியல், ஊடகவியல், புவியியல், அரசியல் அறிவியல், குற்றவியல், குற்றம் சார் நீதி நிர்வாகம், கணினி அறிவியல், வரலாறு, சுற்றுலா மற்றும் தொல்பொருள் ஆகிய பாடங்களில், ஆராய்ச்சி படிப்பில் சேரலாம். விண்ணப்ப படிவங்களை, www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, நவ., 20க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக