திங்கள், 15 மே, 2017

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் தகவல்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் திரு. கே. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், தமிழகத்தில், காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும், பள்ளிக் கல்வித்துறையில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தினை மாற்றம் செய்ய கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக