புதன், 24 மே, 2017

மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன கோடை விடுமுறை சிறு குறிப்பு:

நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன்.

திரும்பி வர 10 நாளாகும்.
-------------------
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட்
பாக்கெட்டும் எடுத்தேன்.

--------------------------
பாத்ரூம் சோப் கேசில
மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப
அங்க கண்டு எடுத்தேன்..
-------------
மூக்குக்கண்ணாடி
அதன் பாக்சில் வைக்கவும்.
போன முறை ஃப்ரிட்ஜில் இருந்தது.
-----------------
வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு.உங்க தாராள
மனச காட்ட வேண்டாம்.
-----------------
காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு daily அவங்ககிட்ட வழிய வேண்டாம்.

நம்ம பேப்பர்காரன் வேற.
-------------------------
சமையல் கட்டு பக்கம்
போக வேணாம். ஸிங்க்கு
காவி கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன்
---------------
சாமி படத்துக்கு விளக்கேத்துங்க

ரெண்டு ஸ்லோகம் சொன்னா நாக்கு
வெந்துடாது
------------------------
வாக்கிங் போறப்போ
டீ ஷர்ட் போட்டுக்கோங்க
ஜிப்பா வேணாம். ஜிப்பா கலர்ல Free size சுடிதார்
டாப்ஸ்  இருக்கு. அனிதா அன்னிக்கு சிரிச்சா.
---------------------
Food coupon க்ரெடிட் கார்டு
எங்கிட்ட இருக்கு...

பீரோவ உருட்ட வேணாம்
-------------------
ரெண்டு Securityக்கும் நூறு நூறு ரூபா கொடுத்திருக்கேன்

நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க வேண்டாம்னுட்டு
--------------------
பால் ஒரு வாரத்துக்கு
வேண்டாம்னுட்டேன்

அங்க ஸீன் க்ரியேட்
பண்ணாம வெளில போய்
சாப்பிடுங்க
----------------------
உங்க உள்ளாடைகள்
பீரோவில் வலது புறமும்
குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு.

மாத்தி போட்டுட்டு Uncomfortable லா
இருந்ததுனு ஆஃபீசுல இருந்து புலம்பாதீங்க.
-----------------
அன்னன்னிக்கு அவுத்து போடறத தண்ணில நனச்சு
காயப்போடுங்க.
வளத்தவங்கள
சொல்லனும்
-----------------------
தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுகிட்டு
பல் தேய்க்காதீங்க..
A.M. மா... P.M. மா...
Confirm பண்ணிட்டு
பால்கனிக்கு வாங்க
-----------------------
உங்க  medical report
பர்ஃபெக்ட்டா இருக்கு.

அந்த லேடி டாக்டரை
பாக்கவேண்டிய அவசியமில்லை.
-----------------
என் தங்கையின் பிறந்தநாள்  போன மாசமே நாம அட்டண்ட் பண்ணியாச்சு. முடிஞ்சிடிச்சி.

நடு ராத்திரில விஷ் பண்றேன் பேர்வழின்னு
வழிய வேணாம்.
---------------
பத்து நாள் wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா  தூங்குங்க.
------------------
அப்றம்  என் தோழிகள்
எல்லாமே Out of station. .
------------------
கட்டக் கடேசியா ஒண்ணு.

ரொம்ப புத்திசாலித்தனமா
நடந்துக்கறதா நினச்சி
ஏதும் பண்ண வேண்டாம்.
நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
சொல்லாம. !!!
-----------------------
இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்

என்னா வில்லத்தனம்...😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக