ஞாயிறு, 21 மே, 2017

ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்! குவியும் பாராட்டுக்கள்..

         ஒரே பள்ளியில் படித்து வரும் இரட்டையர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஒரே மாதிரியாக 494 மதிப்பெண் எடுத்து, அனைவரையும் ஆச்சர்யபடுத்திய மாணவிகளில் மதிப்பெண் பட்டியில் வெளியாகியுள்ளது.
           எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதிய திருநெல்வேலியை சார்ந்த இரட்டையர் ஒரே மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் இரட்டையர்களான ஜோனிகா வளன், ஜோஷிகா வளன் ஆகிய மாணவியர் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். இரட்டையர்கள் என்றால் உருவத்தில் ஒற்றுமை இருக்கும் என்பார்கள் ஆனால் இந்தச்சகோதரிகள், 10ம் ஆம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இரட்டையர்களின் இந்த ஒற்றுமையை கண்டு சக மாணவர்கள் வியந்தனர். இவர்கள் இருவரும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மின் வாரியத்துறையில் அதிகாரியாக இருக்கும் தந்தை, குடும்பத்தலைவியான அம்மா, இருவரும் தங்கள் மகள்களை பற்றி கூறுகையில, சின்ன வயது முதல் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றது இல்லை. இரண்டு பேரும் நன்கு படிப்பார்கள். அதனால்சிறந்த மதிப்பெண் பெறுவார்கள் என நினைத்திருந்தோம். ஆனால் ஒரே மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பாளர்கள் என யாரும் நினைக்கவிலலை, என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக