TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி குரூப் 2ஏ பதவியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும்
26 -ஆம் தேதி கடைசி நாளாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
26 -ஆம் தேதி கடைசி நாளாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
குரூப் 2ஏ பிரிவில் வரும் உதவியாளர்,
கணக்காளர் பதவியிடங்களில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்
உள்ளன. இந்த இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கை கடந்த மாதம் 27 -ஆம்
தேதி (ஏப்.27) வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி (www.tnpsc.gov.in) இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26 ஆம் தேதியாகும்.
விண்ணப்பித்த பிறகு, வங்கி அல்லது தபால் நிலையம் மூலமாக தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த மே 29 -ஆம் தேதி கடைசி நாள்.
குரூப் 2ஏ தேர்வுக்கு இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக