செவ்வாய், 30 மே, 2017

பள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு.

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார்.அடுத்த மாதம், சட்டசபை கூட உள்ளது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு துறை வாரியாக, ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார். 

இதில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக