புதன், 31 மே, 2017

பாத்ரூமில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

  ஸ்மார்ட்போன் தரும் இன்றைய சிக்கல்கள் என்ன தெரியுமா? மருத்துவர் அர்ச்சனா தரும் தகவல்கள்: 

        3 வயது வரை நோ: குழந்தை அழுதால் பெற்றோரே அதன் கையில் ஸ்மார்ட்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதெல்லாம் பெரிய தவறு. 3 வயது வரை குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போனைக் கொடுக்கவே கூடாது.  பெற்றோரைப் பார்த்தும், வெளி உலகைப் பார்த்தும் குழந்தை கற்றுக் கொள்ளத் தொடங்கும் வயது அதுதான். அந்த வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளிடம் தொடங்கினால் கற்றல் திறனில் பெரிய பாதிப்பு ஏற்படும்.
பேன்ட் பாக்கெட் ஆபத்து: ஆண்கள் பெரும்பாலும் பேன்ட் பாக்கெட்டில் போனை வைப்பதால், உயிரணு உற்பத்தி குறையவும் சாத்தியம் உள்ளது. ஹெட்போன் மாட்டிக்கொண்டு மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது, சத்தமாக பாட்டுகேட்பது போன்ற பழக்கத்தால் கேட்கும் திறன் குறைவதுடன் மூளைக்குச் செல்லும் நரம்புகளும் சேதப்படும். மங்கலாகும் கண்: ஸ்மார்ட்போனை பார்த்துகொண்டே இருப்பதால் கண்களில் உள்ள நீர் வற்றி கண்கள் வறண்டுவிடும். இத்துடன் கண்களில் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு கண்கள் மங்கலாகிவிடுகிற பிரச்னையும் ஏற்படுகிறது.

கழுத்து போச்சு: கழுத்தை குனிந்து கைகளை ஒரே நிலையில் வைத்துக்கொண்டு விரல்களால் வேகமாக மெசேஜ் செய்யும்போது கழுத்து எலும்பு, கைவிரல்கள், மணிக்கட்டு என எல்லா பகுதி மூட்டுகளுக்குமே அழுத்தம் அதிகமாகிறது. மணிக்கட்டில் உள்ள நரம்பிலும் அழுத்தம் அதிகமாகி பலவீனமடைகிறது. இதனால் மணிக்கட்டிலிருந்து தோள்பட்டை வரை குடைச்சல் ஏற்படும். இதற்கு Carpal Tunnel Syndrome என்று பெயர். பாத்ரூம் கிருமிகள்: பாத்ரூமில் உள்ள கிருமிகள் செல்போனில் பரவக்கூடும். இதனால் தொற்றுநோய்கள் வர நிறைய வாய்ப்புண்டு. கழிவறையைவிட 3 மடங்கு நுண்கிருமிகள் ஸ்மார்ட்போனில் இருப்பதாக ஓர் ஆய்வு சொல்லியிருக்கிறது.

தூங்கும் முன்: சிலர் இரவில் தூங்குகிற நேரத்திலும் ஸ்மார்ட்போனிலேயே அதிகம் செலவிடுவதால் தூக்கம் கெட்டு மறுநாள் இயல்பு வாழ்க்கையும், சகமனிதர்கள் உறவும் சிக்கலாகிறது. இதேபோல், ஆன்லைன் தள்ளுபடி விளம்பரங்களைப் பார்த்து தேவையில்லாத பொருட்களை வாங்கத்தொடங்கும் பழக்கமும் ஏற்படுகிறது. இந்த ஆபத்திலிருந்தெல்லாம் தப்பிக்கும் வழிவகைகளை யோசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக