ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 80 வயதை நிறைவு செய்தால் அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரர் 80, 85, 90, 95,
100 வயதுகளை நிறைவு செய்யும் மாதத்தின் முதல் நாள் முதலோ அல்லது 1.1.2011
அன்றோ, அதில் எது பின்னரோ அன்று முதல் கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல்
குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள்
ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
அதன்படி, 80 முதல்100 வயதை நிறைவு செய்யும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது பிறந்த நாள் எந்த மாதத்தில் வருகிறதோ, அந்த
மாதத்தின் முதல் நாளில் இருந்து கூடுதல் ஓய்வூதியம், கூடுதல் குடும்ப
ஓய்வூதியம் அனுமதிக்கலாம்.
உதாரணமாக, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் 80 வயதை ஆகஸ்ட் 2008-ஆம் ஆண்டு நிறைவு செய்தால், அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், கூடுதல் குடும்ப ஓய்வூதியத்தை அந்த மாதத்தின் முதல் தேதியில் இருந்து வழங்கலாம். ஆகஸ்ட் முதல் நாளன்றே 80 வயதை நிறைவு செய்துபிறந்த நாளாகக் கொண்ட ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரருக்கு 1.8.2008 முதல் கூடுதல் ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக