திங்கள், 29 மே, 2017

மூன்று நாட்களில், 2,877 ஆசிரியர்கள் இடம் மாறுதல் !!

தமிழகம் முழுவதும், கவுன்சிலிங் மூலம், மூன்று நாட்களில், 2,877 ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்றுள்ளனர். ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கவுன்சிலில், மே, 19 முதல் நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களுக்கும், தனித்தனியாக கவுன்சிலிங் மூலம், இட மாறுதல் வழங்கப்படுகிறது.

இதில், 366 பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலிருந்து, முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வுடன், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

அதேபோல, 1,999 முதுநிலை ஆசிரியர்களும், 38 கணினி பயிற்றுனர்களும், ஏழு வேளாண் பயிற்றுனர்கள், 467 இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் என, மொத்தம், 2,877 பேர் இடம் மாற்றம் பெற்றுள்ளனர். இத்தகவலை, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக