செவ்வாய், 30 மே, 2017

வருவாய் துறை பெயர் மாற்றம்.

தமிழக வருவாய் துறையின் பெயர், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் துறை, நில வரி வருவாய் வசூலிப்பதில், முக்கிய பங்கு வகித்து வந்தது. 2004 டிசம்பர், 26ல், சுனாமி தாக்கிய பின், பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதில், வருவாய் துறையினரின் பங்கு அதிகமானது.

அதன்பின், வருவாய் துறை சார்பில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக, முதல்வர் உள்ளார். இந்த ஆணையம், பேரிடர் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்தது.பெரும்பாலான மாநிலங்களில், வருவாய் துறையானது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல், தமிழகத்திலும் வருவாய் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக