புதன், 24 மே, 2017

இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக் கணை போல் தொடுத்தார்.

காயிதே மில்லத்:

இந்தியாவின் தேசிய மொழி எது?

பதில்: "இந்தி"

காயிதே மில்லத் :
ஏன் இந்தி மொழியை,
தேசிய மொழியாக வைத்தார்கள்?


பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால்.

காயிதே மில்லத் : இந்தியாவின் தேசியப் பறவை எது?

பதில்: மயில்.

காயிதே மில்லத் :
மயில் இனம் இந்தியாவில் மிகக் குறைவு,
இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காக்கை.
ஆகையால் காக்கையைத் தேசியப் பறவையாக வைக்க வேண்டியது தானே?

யாரும் வாய் திறக்கவில்லை.

காயிதே மில்லத்: எது வேண்டும், வேண்டாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்தி தெரிந்தால் தான் நாடு முன்னேறும் என்றால்,
இந்தி பேசத் தெரிந்த, பீகார், ஒடிசா மக்களின் வாழ்க்கைத் தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை?

யாரும் வாய் திறக்கவில்லை.

காயிதே மில்லத் :
கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது.
சவாலாகச் சொல்கிறேன்.
தமிழன் என்று மார்தட்டிச் சொல்லுகிறேன்.

#நேரு கேட்டார்..
நீங்கள் முஸ்லீம்,
ஏன் தமிழ் மீது பற்று?
#ஐயா அவர்கள் சொன்னார்..

#இசுலாம்எனது வழியாகும்..
# இன்பத்தமிழே எனது_ மொழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக