19.05.2017 அன்று பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிட்ட பின்னர்,
23.05.2017 முதல் www.peps.tn.nic.in மற்றும் www.peps.nic.in ஆகிய
இரு இணையதள முகவரிகளிலிருந்து அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்கள் தங்களுக்கான பள்ளித் தேர்வர்களுக்கும், தனித்தேர்வர்
தேர்வுமைய பள்ளித் தலைமையாசிரியர்கள் தமது மையத்தில் தேர்வெழுதிய
தனித்தேர்வர்களுக்கும் உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Mark Certificate) தங்களுக்குப் பெயர்ப் பட்டியல் தயார் செய்ய வழங்கப்பட்ட USER ID, PASSWORD-ஐக்
கொண்டு பதிவிறக்கம் செய்து அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து,
பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தயாராக
வைத்துக் கொள்ள வேண்டும்.
வருகிற 25.05.2017 அன்று முதல் பள்ளித் தேர்வர்கள்/தனித் தேர்வர்களுக்கு மேற்படி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Mark Certificate) சம்பந்தப்பட்ட பள்ளிகள்/தனித் தேர்வர் தேர்வு மையம் மூலமாக விநியோகம் செய்யப்படவேண்டும். மேற்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மட்டுமே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்ய
வேண்டும்.
பள்ளித் தேர்வர்கள் / தனித்தேர்வர்கள் தேவைப்படின் அவரவர்களே நேரடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து 25.05.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக