தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் (மே 22) தொடங்குகிறது.
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல், பொது மாறுதல்
ஒன்றியத்துக்குள், பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மே 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மே 23-ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் (ஒன்றியத்துக்குள்), இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மே 25-ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) மே 26-ஆம் தேதியும் நடைபெறும்.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் மே 29, 30-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக