புதன், 24 மே, 2017

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டங்கள்.

அமைச்சர் செங்கோங்கோட்டையன் அளித்த பேட்டி: முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக பாட திட்டம் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாக மாற்றப்படும். புதிய பாடத்தில் தமிழர் பண்பாடு, கலாசாரம் சேர்க்கப்படும். பாட திட்டம் மாற்றம், பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக பாட திட்டம் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாக மாற்றப்படும். 2018-19 கல்வியாண்டில் - 1, 6, 9, 11 வகுப்புகளுக்கும் , 2019-20 ல் 2,7,10,12ம் வகுப்புகளுக்கும், 2020 -21 ல் 3,4,5,8 ம் வகுப்புகளுக்கும் , பாடத்திட்டங்கள் மாற்றப்படும். புதிய பாடத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை ஐ.டி., கல்வி கற்றுத்தரப்படும்.

பிளஸ், பிளஸ்2வில் தேர்ச்சி பெற பாடவாரியாக 35 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்தால், பிளஸ்2வில் அந்த தேர்வை எழுதலாம். ஜூன், ஜூலையில் சிறப்பு தேர்வு நடைபெறும்.

பிளஸ்1, பிளஸ்2 தேர்வில் தேர்வு மதிப்பெண் 1200லிருந்து 600 ஆகவும், தேர்வு நேரம் 2.30 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ்1, பிளஸ்2வுக்கு பின் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.


முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வாகும் வரை தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். புதிய பாடதிட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக