புதன், 24 மே, 2017

Brothers & Sisters இதை முழுமையாக படியுங்கள்.....!

மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்

தந்தை : இந்த போன் எவ்ளோமா??


மகள் : Rs 40,000 அப்பா

தந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??

மகள் : Rs 4000 தான் அப்பா

தந்தை : என்னது நாலாயிரமா??

மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்ன இருக்கு??
இதெல்லாம் ஒரு பிரச்சனையா??

தந்தை :ஏமா 40,000-க்கு போன் வாங்கிருக்க அது பத்திரமா இருக்க அதை தயாரித்தவர்கள் எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா வித்தாங்க??
நாம அதுக்கு வேற தனியா செய்து கொள்ள வேண்டுமா?

மகள் : என்னப்பா?? அவங்க போன் தயாரித்து தான் குடுப்பாங்க அதை நாமதான் பத்திரமா வைத்துக் கொள்ளணும். அது மட்டும் இல்லப்பா பாருங்க இந்த கவர் போட்டதும் போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு??
இந்த ஸ்கிரீன் கார்டு போன்-ல கீறல் விழாம பாத்துக்கும் அப்பா

தந்தை : அப்படியா??

ஏம்மா நீ இந்த phone-யை விட எவ்வளவு அழகா இருக்க??
இந்த போன்-ஐ பாதுகாக்கிறியே
ஏன் மா உன்னை பாதுகாக்க மாட்டேங்கிற??

நான் உன்னை உன் உடலை மறைக்குமாறு உடை போடச் சொல்லிக் கொண்டே இருக்கேன். நீ போடவே மாட்டேங்கிற??

இந்த போன விட நீ விலைமதிப்பு இல்லாதவளா ?இது உனக்கு தெரியவில்லையா??

இந்த கவர் போட்டதும் போன் எவ்வளவு அழகா இருக்கு ஆனா நீ முழுமையான உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்??
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பார்த்துக் கொள்ளும் அல்லவா??

யாரோ ஒருவர் தயாரித்த இந்த தயாரிப்பிற்கே நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது
எல்லாம் வல்ல இறைவன் படைத்த என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா??

இந்த phone-ஐ விட நீதான் பொக்கிஷமானவள் முதலில் முழுமையான உடை போட்டு உன்னை பாதுகாத்து கொள் என்று கூறினார்.

இந்த தந்தையின் அறிவுரை அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும் தேவை. எனவே தான் இதை இங்கே பதிவு செய்கிறேன்.

"நிலவின் அழகானது மேகங்கள் அதை மூடி மறைத்து வைத்திருப்பதால்தன் அழகு அதிகரிக்குமே தவிர சிறிதும் குறையாது , அதுபோல ஒரு பெண்ணின் அழகு என்பது போன்றவற்றால் அதிகரிக்குமே தவிர குறையாது. இதைபுரிந்து நடந்து கொள்ளுங்கள் சகோதரிகளே. சகோதரர்களும் உங்கள் வீட்டு பெண்களிடம் கூறி புரிய வையுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக