நாடு முழுவதும், 100 மாவட்டங்களில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மன உளைச்சல், நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கான மருத்துவப்
பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கியுள்ளது.மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள, தேசிய மருத்துவக் கொள்கையின்படி, நோய்த் தடுப்பு முறைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
புற்றுநோய்அதன்படி, என்.சி.டி., எனப்படும், ஐந்து முக்கிய தொற்றாத நோய்கள் உள்ளதா என்பதற்கான பரிசோதனை திட்டம், டில்லியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மன உளைச்சல், நீரிழிவு மற்றும் வாய், கருப்பை, மார்பக புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டம் குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஜே.பி. நட்டா கூறியதாவது:தற்போதைய வாழ்க்கை முறையால், பல்வேறு நோய்களால் அவதிப்படுகிறோம். இதனால், மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதுடன், நாட்டின் உற்பத்தியும் பாதிக்கிறது.
அதனால் தான், நோய்க்கு சிகிச்சைக்கு பதிலாக, நோய் தடுப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.சிகிச்சை மையம்அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தொற்றாத நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக, 100 மாவட்டங்களில் உள்ளவர்ளுக்கு இந்த சோதனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, 50 கோடி பேருக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படும்.
இரண்டு ஆண்டுகளில், இந்த வகை நோய்களுக்கான சிகிச்சை மையங்கள், நாடு முழுவதும், 400 நகரங்களில் துவங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு பிரசாரம்
மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சரும், அப்னா தள் கட்சியைச் சேர்ந்தவருமான அனுபிரியா படேல் கூறியதாவது:ஐந்து வகையான, தொற்றாத நோய்களின் தாக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளன. இந்த நோய்களால், ஆண்டுக்கு, 90 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
நீரிழிவு நோயால், ஏழு கோடி பேரும்; மாரடைப்பு நோயால், 78 கோடி பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த புள்ளி விபரங்களின்படி, இந்த நோய்களின் தீவிரம் புரிய வரும்.
நம் வாழ்க்கை முறையால், இந்த நோய்கள் ஏற்படுவதால், அவற்றை தவிர்ப்பது மிகவும் சுலபம். இது தொடர்பான விழிப்புணர்வு
பிரசாரம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக