சனி, 20 மே, 2017

மின் வாரிய 'டைப்பிஸ்ட்' தேர்வு முடிவு வெளியீடு.

மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் காலி பணியிடங்களை நிரப்ப, 2016ல், அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வு நடத்தியது. இதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, ஏப்ரலில் நேர்காணல் நடந்தது. இதையடுத்து, எழுத்து மற்றும் நேர்காணலில் அதிக மதிப்பெண் எடுத்து, வேலைக்கு தேர்வாகி உள்ள, 200 நபர்களின் பட்டியலை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
 
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட, 200 நபர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அடுத்ததாக, 10 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தேர்வானோர், குறிப்பிட்ட காலத்துக்குள் வேலையில் சேராவிட்டால், காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்களுக்கு, வரிசைப்படி வேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக