திங்கள், 22 மே, 2017

ஆன்லைன் ஹேக்கர்களிடம் சிக்காமல் இருக்க 5 டிப்ஸ்.!

         சமூக வலைதளங்களில் துவங்கி, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வங்கி சேவை வரை அனைத்திற்கும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி வருகின்றோம். 
         இவை அனைத்திற்கும் பாஸ்வேர்டு என்ற கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட யூஸர் அக்கவுண்ட் எனப்படும் கணக்கு குறியீடுகளை தான் பயன்படுத்துகின்றோம். இது போன்ற சேவைகளில் அதிகப்படியான தனிப்பட்ட தகவல்களும் பதிவு செய்கின்றோம். இவைகளை பாதுகாப்பாக வைப்பது நமக்கு வீன் தலைவலிகளை தவிர்க்க உதவும். இங்கு உங்களது ஆன்லைன் அக்கவுண்ட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள சில எளிய டிப்ஸ்களை தான் தொகுத்திருக்கின்றோம். அதிக கடினமான மற்றும் நீண்ட கடவுச்சொல் ஹேக்கர் மட்டுமில்லை வேறு யாராலும் யூகிக்க முடியாது.  
கடவுச்சொல் தேர்வு செய்யும் போது உங்களது குழந்கைள் பெயர், பிறந்த தேதி மற்றும் இதர தனிப்பட்ட தகவல்களை சேர்க்க கூடாது. நீண்ட கடவுச்சொல்லில் அதிக வார்த்தைகள், இடையில் எண் போன்றவைகளை பயன்படுத்தினால் உங்களது கடவுச்சொல் உங்களை தவிற வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும். பல்வேறு தளங்களிலும் ஒரே கடவுச்சொல் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
          பல்வேறு கடவுச்சொற்களையும் நினைவில் கொள்ள ஆன்லைன் சேவைகளையோ அல்லது உங்களது தனிப்பட்ட குறிப்பேடுகளில் குறித்து வைத்து கொள்ளலாம். சீரான இடைவெளியில் உங்களது கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றுவது நல்லது. நீண்ட நாள் ஒரே கடவுச்சொல் பயன்படுத்துவது உங்கள் தரவுகளுக்கு ஆபத்தாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. ஒரு முறை பயன்படுத்திய அல்லது பழைய கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது மல்டி-ஃபேக்டர் ஐடென்டிஃபிகேஷன் அதாவது குறிப்பிட்ட சேவையில் இரண்டாவது கடவுச்சொல் பயன்படுத்துவது ஆகும். 
         பொதுவாக இது போன்ற கடவுச்சொல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். இவ்வாறு செய்யும் போது ஹேக்கர்களால் உங்களது மொபைல் போன் இல்லாமல் குறிப்பிட்ட சேவையை பயன்படுத்துவது கடினமாகி விடும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத சேவைகளின் கணக்குகளை அழித்தல் அல்லது டீ-ஆக்டிவேட் செய்வது நல்லது. பயன்படுத்தாத கணக்குகளை விற்பனை செய்வதை பல்வேறு ஹேக்கர்களும் பொழுதுபோக்காக செய்து வருகின்றனர். நீங்கள் பயன்படுத்தாத கணக்குளை அக்கவுண்ட் செட்டிங்ஸ் ஆப்ஷனில் கடவுச்சொல் பயன்படுத்தி அழித்திட முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக