தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர்
சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. மே 31ம் தேதியுடன்
ஆன்லைன் பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் கடந்த
ஆண்டு பொறியியல் கட் ஆப் மதிப்பெண்கள் இணையதளத்தில்
(https://www.tnea.ac.in/) பதிவேற்றம் செய்ய்ப்பட்டுள்ளது.
அந்த இணையதளத்தில் எந்த மாவட்டத்தில் மாணவர்
படிக்க விரும்புகிறார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதைதொடர்ந்து அந்த
மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியலிடப்படும். அதில் மாணவர் படிக்க
விரும்பும் கல்லூரி, துறையை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் சாதிவாரி இடஒதுக்கீட்டு பிரிவை
தேர்வு செய்து உள்ளீடு செய்வதற்கான பட்டனை அழுத்தியதும், குறிப்பிட்ட
கல்லூரியில் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் கணினி திரையில் தெரியும்.
இதன்மூலம் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணையும் தங்களின் கட் ஆப்
மதிப்பெண்ணையும் மாணவர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு கட்
ஆப் மதிப்பெண் அதிலிருந்து சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக