வெள்ளி, 17 மார்ச், 2017

Thursday, March 16 தமிழக பட்ஜெட் 2017 - 2018:பள்ளிக்கல்வி துறை.

2017 - 2018 நிதியாண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். >அதன் விவரம்: 150 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்


பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.26 ஆயிரத்து 932 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் 2017- 2018 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், ''அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை குறைக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகையாக அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.314 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ் முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத்தொகைகள் ரூ.1,476 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் (ஆர்எம்எஸ்ஏ) கீழ் ரூ.1,266 கோடியும் மத்திய அரசு வழங்காத நிலையிலும் மாநில அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
2017-18-ம் ஆண்டில் எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு ரூ.2,656 கோடியும், ஆர்எம்எஸ்ஏ திட்டத்துக்கு ரூ.1,194 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.26 ஆயிரத்து 932 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது'' என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக