ஞாயிறு, 9 ஜூலை, 2017

மருத்துவ படிப்பில் சேர 50 ஆயிரம் பேர் விண்ணப்பம்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 50 ஆயிரம் பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான கவுன்சிலிங், வரும், 17ல் நடைபெற உள்ளது.

விண்ணப்பங்களை, 43 ஆயிரத்து, 206 பேர் நேரடியாகவும், 7, 352 பேர் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துள்ளனர்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, நேற்று கடைசி நாள். அதன்படி, அரசு இடங்களுக்கு, 31 ஆயிரத்து, 323 பேர்; சுயநிதி கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 19 ஆயிரத்து, 235 பேர் என, 50 ஆயிரத்து, 558 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான தரவரிசை பட்டியல், 14ம் தேதி வெளியிடப்படுகிறது.
 

இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர் செல்வராஜ் கூறுகையில், ''கடந்த ஆண்டு, 21 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. இந்த ஆண்டு அதை விட இருமடங்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியல், திட்டமிட்டப்படி வெளியிடப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக