விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் முகாம், வேலுார், ஊரீஸ் கல்லுாரியில் நடக்கிறது.மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலுார், திருவாரூர், கரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அக்., 9ல் பங்கேற்கலாம். அவர்களுக்கு, முதல் நாளில், எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் வெற்றி பெறுவோருக்கு, மறுநாள், உடல் தகுதித் தேர்வு நடைபெறும்.
வேலுார், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தர்மபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலுார், நீலகிரி, பெரம்பலுார் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அக்., 12ல், முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில், 1998 ஜன., 13ல் இருந்து, 2001 ஜூன், 27க்குள் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், கணிதம் பாடம் எடுத்து படித்து, அதில், 50 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள், தொழில்நுட்பம் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 22396565 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்; www.airmenselection.gov.in இணையதளத்தையும் பார்வையிடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக