இந்திய வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டுத்துறைக்கு விளையாட்டு வீரர் ஒருவர் அமைச்சராகியுள்ளார்.
இந்திய விளையாட்டுத்துறை அமைச்சராக விஜய் கோயல் இருந்து வந்தார். பிரதமர் மோடி இன்று மாற்றியமைத்த அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த விஜய் கோயலுக்கு பதிலாக துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் விளையாட்டுத்துறை அமைச்சராக (தனிபொறுப்பு) நியமிக்கப்பட்டார்.
நாளை அவர் பதவியேற்றுக் கொள்கிறார். இந்திய விளையாட்டுத்துறைக்கு விளையாட்டு வீரர் அமைச்சராவது இதுவே முதன்முறை. தற்போது, 47 வயதான ரத்தோர், இதற்கு முன் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராக இருந்தார்.
2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் ரத்தோர் வெள்ளி வென்றார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர். காமன்வெல்த் போட்டியிலும் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியவர்.
சிட்னி மற்றும் கெய்ரோவில் நடந்த உலகத் துப்பாக்கி சுடும் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்,2013ம் ஆண்டு அரசியலில் நுழைந்த ரத்தோர், ஜெய்ப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பு ரத்தோருக்கு வழங்கப்பட்டது. இதுநாள் வரை விளையாட்டுத்துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் இருந்தது. முதன்முறையாக விளையாட்டு வீரரே அமைச்சராகியுள்ளார் இனியாவது முன்னேற்றம் ஏற்படுமா?
வெயிட்டிங் மிஸ்டர் . ரத்தோர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக