வியாழன், 27 ஜூலை, 2017

மத்திய அரசு துறைகளில் புதிதாக 7,900 பதவிகள்.

மத்திய அரசு துறைகளில், 2016 - 17 நிதியாண்டில், புதிதாக, 7,900 பதவிகள் உருவாக்கப்பட்டதாக, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திரா சிங், லோக்சபாவில்தெரிவித்தார். மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, இந்த பதவிகள் உருவாக்கப்பட்டதாக, அமைச்சர் கூறினார்.

மேலும், ''தனியார் துறையில் உள்ள திறமையான நிர்வாகிகளை, மத்திய அரசு துறைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் திட்டம் பரிசீலனையில் உள்ளது,'' அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக