சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆக., 2 முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்கள் உள்ளன.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பை, ஆக.,2 முதல், 30 வரை, சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம் மற்றும் கோட்டார் அரசு இந்திய முறை மருத்துவக் கல்லுாரி முதல்வர்களிடம் இருந்து, அலுவலக வேலை நாட்களில், நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆக., 31 மாலை, 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, www.tnhealth.org இணையதளத்தை பார்வையிடலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக