ஞாயிறு, 16 ஜூலை, 2017

விநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

இது ஔவையார் அருளிய விநாயகர் துதிப் பாடல் ஆகும்.இப் பாடல் வரிகளை
சாதரணமாய் காணும் போது விநாயகப்
பெருமானை தினமும் துதித்து,அவர் பாதம்
சரணடைபவர்க்கு நல்ல வாக்கு
வன்மையும்,திடமான மனோ பலமும், மகா
லட்சுமி கடாட்சமும், உடல் பலமும் கிட்டும்
என்ற பொருள் விளக்கம் தோன்றும்.


ஆனால் உண்மை விளக்கம் அதுவல்ல,இப்
பாடலை வடித்த ஔவையார்
நரை,திரை,மூப்பு என்ற மூன்றும் உடலில்
தோன்ற விடாமல் காக்கும் காயகல்ப மருந்து
முறை இரகசியத்தை சூட்சுமமாய்
வடித்துள்ளார்.

சித்தர் பாடல்களில் உள்ள பரிபஷைகளின்
விளக்கம் அறிந்தவர்களுக்கு இப்பாடலில் உள்ள
சூட்சுமம் மிக எளிதாய் புரியும்.

மேற்கண்ட பாடல் வரிகளில் :
***********

மாமலராள் பூக்கொண்டு என்பது -
தாமரைப்பூ

மேனி என்பது - குப்பைமேனி

திருமேனி என்பது - வல்லாரை

தும்பி என்பது - தும்பை

கையான் என்பது - கையான்தகரை
[கரிசலாங்கண்ணி]

பாதம் என்பது - செருப்படை

தாமரைப் பூவில் - செம்புச் சத்து

குப்பைமேனியில் - தங்கச் சத்து

வல்லாரையில் - இரும்புச் சத்து

தும்பையில் - நாகச் சத்து

கரிசலாங்கண்ணியில் - இரும்புச் சத்து

செருப்படையில் - ஈயச் சத்து

உடலுக்கு மிகவும் அவசியத் தேவையான
இந்த ஆறுவித உலோகச்சத்துக் கள் இந்த
மூலிகைகளில் அடங்கியுள்ளன.இந்த
மூலிகை உலோகச் சத்துக்களினால் உடல்
மிகவும் ஆரோக்கியமாகவும்,தேக
பலத்துடனும், நோயெதிர்ப்பு சக்தியுடன்
என்பது முற்றிலும் உணமை.

இறை வழிபாடும்,உடல் நலமும் இரண்டும்
ஒன்றாய் அமைந்த அற்புத பாடல் இது.

செயல்முறை விளக்கம் :
*********

தாமரைப்பூ,குப்பைமேனி,வல்லாரை,தும்பை,கரிசலாங்கண்ணி,
செருப்படை இந்த ஆறு வகை
மூலிகைகளையும் சேகரித்து மேற்கண்ட
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்"என்ற
பாடல் வரிகளால் விநாயகப்பெருமானை
அர்ச்சனை செய்து பூஜித்து பின்பு எடுத்து
இவைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து
நன்கு காய்ந்தவுடன் இடித்து தூள்
செய்யவும்.[ஆறு மூலிகையும் சம
அளவு ]அல்லது மிக்ஸியில் போட்டு
பொடித்துக் கொள்ளவும்.

இது ஒரு காயகல்ப மூலிகை சூரணமாகும்.
இதனை காலை,மாலை இரண்டு டீஸ்பூன்
அளவு எடுத்து 200,மிலி பசும்பாலில் கலந்து
பனங்கற்கண்டு சிறிது சேர்த்து அருந்தவும்.

ஒரு மண்டலம் தொடந்து உண்ண உடலில்
உள்ள அனைத்து நோய்கள்
நீங்கும்.ஆரோக்கியம் மிளிரும்,தேகம்
திடப்படும், மேலும் மேற்கண்ட பாடலில் உள்ள
அனைத்து நற்பலன்களும் கிட்டும்.

- சித்தர்களின் குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக